சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.086
திருநாவுக்கரசர்
தேவாரம்
காலபாசம் பிடித்து எழு தூதுவர், பண் - திருக்குறுந்தொகை (திருவாட்போக்கி (ரத்னகிரி) இரத்தினகிரீசுவரர் சுரும்பார்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=-AD6BgYTFHM |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.086  
காலபாசம் பிடித்து எழு தூதுவர்,
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருவாட்போக்கி (ரத்னகிரி) ; (திருத்தலம் அருள்தரு சுரும்பார்குழலம்மை உடனுறை அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருவடிகள் போற்றி )
காலபாசம் பிடித்து எழு தூதுவர், பாலகர், விருத்தர், பழையார் எனார்; ஆலநீழல் அமர்ந்த வாட்போக்கியார் சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே. | [1] |
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப் படுத்தபோது பயன் இலை-பாவிகாள்! அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை எடுத்தும், ஏத்தியும், இன்புறுமின்களே! | [2] |
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர் உந்தி, ஓடி, நரகத்து இடாமுனம்,- அந்தியின்(ன்) ஒளி தங்கும் வாட்போக்கியார்- சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே. | [3] |
கூற்றம் வந்து குமைத்திடும் போதினால் தேற்றம் வந்து, தெளிவு உறல் ஆகுமே? ஆற்றவும் அருள் செய்யும் வாட்போக்கிபால் ஏற்றுமின், விளக்கை, இருள் நீங்கவே! | [4] |
மாறு கொண்டு வளைத்து எழு தூதுவர் வேறு வேறு படுப்பதன் முன்னமே, ஆறு செஞ்சடை வைத்த வாட்போக்கியார்க்கு ஊறி ஊறி உருகும், என் உள்ளமே. | [5] |
கானம் ஓடிக் கடிது எழு தூதுவர் தானமோடு தலை பிடியாமுனம், ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார், ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே. | [6] |
பார்த்துப் பாசம் பிடித்து எழு தூதுவர் கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே, ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார் கீர்த்திமைகள் கிளர்ந்து உரைமின்களே! | [7] |
நாடி வந்து, நமன் தமர் நல் இருள் கூடி வந்து, குமைப்பதன் முன்னமே, ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை வாடி ஏத்த, நம் வாட்டம் தவிருமே. | [8] |
கட்டு அறுத்துக் கடிது எழு தூதுவர் பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே, அட்டமா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு இட்டம் ஆகி, இணை அடி ஏத்துமே! | [9] |
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர் பரக்கழித்து, அவர் பற்றுதல் முன்னமே, அரக்கனுக்கு அருள் செய்த வாட்போக்கியார் கரப்பதும் கரப்பார், அவர் தங்கட்கே. | [10] |